×

அரசு கல்லூரி விளையாட்டு விழா

 

தேனி, ஏப். 22: தேனி அருகே வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கவுசல்யா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் உமாதேவி வரவேற்றார். விழாவிற்கு தலைமை வகித்து கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், ‘‘தமிழ்நாடு அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இக்கல்லூரியில் 66 மாணவிகள் பயனடைந்துள்ளனர். பெண்கல்வியை ஊக்குவிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் வெற்றி பெற வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் வேல்முருகன், வணிகவியல் துறைத்தலைவர் செல்லராசா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு கல்லூரி விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Govt College Sports Festival ,Veerabandi ,Government College ,of Arts ,Science ,Theni ,Government College Sports Festival ,Dinakaran ,
× RELATED வீரபாண்டி காவல்துறை சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு